TNPSC latest recruitment notification 2022 for 1231 posts apply soon: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 4 முதல் குரூப் 1 வரையிலான தேர்வுகளும், பிற துறை சார்ந்த பணியிடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தற்போது தேர்வாணையம் 5 விதமான தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை என்ன பதவிகள், அவற்றிற்கான தகுதிகள் என்னென்ன உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
கணக்கு அலுவலர் (Accounts Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountants / Cost Accountants படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.56,900 – 2,09,200
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.08.2022
மேலும் தெரிந்துக் கொள்ள: TNPSC; தமிழ்நாடு அரசு வேலை; உடனே அப்ளை பண்ணுங்க!
உதவி இயக்குனர் சமூக நலத்துறை (Assistant Director)
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Home Science or Psychology or Sociology or Child Development or Food and Nutrition or Social Work or Rehabilitation Science படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.56,100 – 2,05,700
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.08.2022
மேலும் தெரிந்துக் கொள்ள: https://www.tnpsc.gov.in/Document/english/15_2022_AD_Social_Welfare_Eng.pdf
குரூப் 1 தேர்வு
காலியிடங்களின் எண்ணிக்கை: 92
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.56,100 – 2,05,700
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.08.2022
மேலும் தெரிந்துக் கொள்ள: TNPSC குரூப் 1 தேர்வு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
தொழிற்கல்வி ஆலோசகர் மற்றும் சமூக அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post-Graduation in Social Work with Medical and Psychiatric Social Work படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.36,200 – 1,33,100
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.08.2022
மேலும் தெரிந்துக் கொள்ள: TNPSC; தமிழ்நாடு அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க!
நில அளவர் மற்றும் வரைவாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1089
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது நில அளவர் அல்லது வரைவாளர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.19,500 – 71,900
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.08.2022
வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tnpsc-latest-recruitment-notification-2022-for-1231-posts-apply-soon-487401/