சனி, 18 நவம்பர், 2017

பிரபல நடிகையின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு! November 18, 2017

Image

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்ஷாலி இயக்கத்தில் உருவான திரைப்படம் பத்மாவதி, இந்த திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே ராணியாக நடித்துள்ளார். ஆனால் ராஜ்புத் சமூகத்தை புண்படுத்தும் விதத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பத்மாவதி திரைப்படத்தை தடை செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சத்திரிய குழுவைச் சேர்ந்த தக்கூர் அபிஷேக் சோம் என்பவர் பத்மாவதி திரைப்படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்ஷாலி மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரின் தலையை கொண்டு வருவோருக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நடிகை தீபிகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தீபிகா படுகோனேவிற்கு கொலை மிரட்டல் விடுத்த தக்கூர் அபிஷேக்கை உத்தரப்பிரதேச போலீசார்  கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் ஸ்ரீ ராஜ்பூத் கார்னி சேனா என்ற அமைப்பும் பத்மாவதி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

பத்மாவதி திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கியதில் இருந்தே பல அமைப்புகள் அந்த திரைப்படத்திற்கு தடை கோரி கண்டன குரல்களை எழுப்பி வந்தனர். மேலும் இயக்குநர் சஞ்சய் பன்ஷாலி ராணி பத்மாவதியின் வாழ்க்கையை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி ராஜ்பூத் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Posts: