சனி, 18 நவம்பர், 2017

மத்திய அமைச்சரின் கருத்து மீனவர்களை கொச்சைப்படுத்துகிறது - மு.க.ஸ்டாலின் November 18, 2017

Image

தமிழகத்தில் இதுவரை நடந்த வருமான வரி சோதனைகளின் முடிவுகள் என்ன, என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தவில்லை, என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, மீனவர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் எதற்காக வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்பதே தெரியவில்லை, என்றும், இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகள் என்ன, என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த சோதனை , முன்னாள் மேயர் துரைசாமி வீட்டில் நடந்த சோதனை, இவை என்ன ஆனது என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Posts: