செவ்வாய், 21 நவம்பர், 2017

75 பூச்சிகள் அழிந்துவிட்டன - அதிர்ச்சிகர ஆய்வு! November 20, 2017

Image

கடந்த 27 ஆண்டுகளில் பறக்கும் திறன் கொண்ட பூச்சிகளில் 75 சதவீதம் அழிந்துவிட்டதாக ஜெர்மனியின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் தாவரங்களில் ஏற்படும் மகரந்த சேர்க்கை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பறவைகள் மற்றும் விலங்குகள் உணவில்லாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் குறிப்பாக பூச்சிகளை உண்ணும் பறவைகளின் உணவில் ஐந்தில் நான்கு பங்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மகரந்தச்சேர்க்கையில் மிக முக்கியமான பங்கு வகித்து உலகின் உணவு உற்பத்திக்கும், இயற்கை சமநிலைக்கும் ஆதாரமாக இருப்பவை பூச்சிகள். பூச்சிகள் இறந்துவிட்டால் உலகம் விரைவில் அழிந்துவிடும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞான மேதைகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.