திங்கள், 20 நவம்பர், 2017

மத்தியில் உள்ள ஆட்சி மதவெறி பிடித்த ஆட்சி என ஸ்டாலின் விமர்சனம்! November 20, 2017

Image

பாஜகவால் தமிழகத்தில் காலை மட்டுமல்ல, கையைக் கூட ஊன்ற முடியாது என திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தங்கவேலு இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது திருமண மேடையில் பேசிய அவர், மத்தியில் உள்ள ஆட்சி மதவெறி பிடித்த ஆட்சி என்றும், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்காமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டன் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றாலும் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கவில்லை என விமர்சித்த அவர், தமிழக அரசை மிரட்டி, மத்திய பாஜக அரசு தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது எனவும் குறிப்பிட்டார். என்றாலும் பாஜகாவால் கால் மட்டுமல்ல கையைகூட ஊன்ற முடியாது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
source: ns7.tv