வெள்ளி, 10 நவம்பர், 2017

சசிகலா குடும்பத்தினரைச் சுற்றி எங்கெல்லாம் வருமான வரி சோதனை நடக்கிறது? November 10, 2017

Image

சசிகலா உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நீடிக்கும் நிலையில், எந்தெந்த இடங்களில் இன்று சோதனை நடக்கிறது என்பதை இப்போது காணலாம்.

✔ தஞ்சையில் சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் வீடு.
✔ மகாதேவன் உறவினர் முன்னாள் கவுன்சிலர் ராஜேஸ்வரன் இல்லம்.
✔ நாமக்கல்லில்  கூட்டுறவு காலனியில் உள்ள சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டில் ரெய்டு.
✔நாமக்கல் பி.வி.ஆர் வீதியில் உள்ள TNPSC குழு உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி  வீடு .
✔நாமக்கலில்  வழக்கறிஞர் செந்திலின் தொழில் பங்குதாரரான சுப்பிரமணியம் வீடு் .
✔நாமக்கல் முல்லை நகரில்  வழக்கறிஞர் செந்தில் அலுவலகத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் பாண்டியனின் வீடு.
✔மன்னார்குடி சுந்தரகோட்டையில் உள்ள திவாகரன் வீடு
✔திவாகரனின் ஆதரவாளர்கள்  13 பேர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை .
✔புதுச்சேரி லஷ்மி ஜுவல்லர்ஸில்  2வது நாளாக சோதனை.
✔சத்தியமங்கலம் அடுத்த கொத்தமங்கலம் தனியார் காகித ஆலையில் சோதனை.
✔கடலூர்  திருப்பாதிரிப்புலியூரில்  தினகரனின் ஜோதிடர் சந்திரசேகர் வீடு.
✔சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு கர்சன் எஸ்டேட்டிலும் சோதனை.
✔சென்னை அண்ணா நகரில் விவேக் மாமனார் பாஸ்கர் வீட்டில் சோதனை.
✔சென்னையில் உள்ள ஜெயா  டிவி அலுவலகம்.
✔சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு கர்சன் எஸ்டேட்.
✔கோவை மணல் குத்தகைதாரர் ஆறுமுகசாமியின் வீடு, அலுவலகங்கள்.
✔கோவை போத்தனூரில்  மரவியாபாரி சஜீவனின் பர்னிச்சர் கடை உட்பட 6 இடங்கள்.

உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

Related Posts: