முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக அணையை ஆய்வு செய்த மூவர் குழு தலைவர் கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு அணையில் 16 மாதங்களுக்கு பிறகு புதிய மூவர் குழு உறுப்பினர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். காலை நடைபெற்ற இந்த ஆய்வு குறித்து பின்னர் குமுளி ஒன்னாம்பயில் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக கேரள அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பணிதுறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர் சுமார் இரண்டரை மணிநேரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளரும் மூவர் குழு தலைவருமான குல்சன் ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவித்தார். இரு மாநில அரசுகள் மற்றும் அணை பிரதிநிதிகள் தரும் ஒத்துழைப்பினைப் பொருத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். பேபி அணையில் ஆய்வுகள் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர் அணையைப் பலப்படுத்துவது குறித்து அடுத்தகட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட காவேரி தொழில்நுட்பப்பிரிவின் தலைவர்
சுப்பரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக மக்களின் முக்கிய கோரிக்கையான முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.