
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வனச்சுற்றுலா பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிரப்பரப்பை கொண்ட சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில், அண்மையில் வனச்சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சுற்றுலா திட்டத்திற்கு வருகை புரியும் பயணிகளை கவரும் வகையில், பண்ணாரியில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஆசனூரில் புலி உருவத்துடன் கூடிய சுற்றுலா பயணிகள் டிக்கெட் கவுண்டர் மற்றும் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வனச்சுற்றுலா செல்லவிரும்புபவர்கள் வாரந்தோறும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சத்தியமங்கலம் வனஅலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.