
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைக்கப்படாததால் கழுத்தளவு தண்ணீரில் சடலத்துடன் வாய்க்காலில் நீந்தி செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ளது காமராஜர்நல்லூர். அக்கிராமத்திற்காக ஏரல் அருகே சுடுகாட்டிற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த சுடுகாட்டிற்கு செல்ல, வாய்க்காலைக் கடந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை உள்ளது.
தற்போது மழைக் காலம் என்பதால் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால், கழுத்தளவு தண்ணீரில், சடலத்தைத் தூக்கிக் கொண்டு நீந்தி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் அவர்கள், பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.