
ஜெர்மனியின் பான் நகரில் பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் 2020ஆம் ஆண்டுக்கு முன் செயல்திட்டத்தில் இறங்கவேண்டும் என வலியுறுத்தினர்.
ஜெர்மனி பான் நகரில் ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலகின் இருநூறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். புவி வெப்பநிலையைக் குறைப்பதற்கான செயல் திட்டத்தை வகுப்பதற்கான நடைமுறையில் 2020ம் ஆண்டுக்குள் இறங்க வேண்டும் எனப் பெரும்பாலான பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
பாரீஸ் மாநாடு, கியோட்டோ ஒப்பந்தம் ஆகியவற்றில் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவு ஒவ்வொரு நாடும் மாசு வெளியிடும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.