ராமேஸ்வரம் மீனவர்களை குறிவைத்து, சீனப் படகு என்ஜின்களை விற்கும் முயற்சியில், சீன வியாபாரிகள் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் கடற்கரை பகுதிக்கு லேப்டாப்புடன் வந்த, இரு சீன இளைஞர்கள், அங்கிருந்த மீனவர்களிடம் சீன தயாரிப்பு இன்ஜின்கள் குறித்து விவரித்து, அவற்றை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 150 குதிரைதிறன் கொண்ட எஞ்சினை பயன்படுத்தி மட்டுமே, மீன் பிடிக்க தமிழக அரசின் விதி உள்ளது. இந்நிலையில் 200 குதிரை திறன் கொண்ட சீன இஞ்சினை பயன்படுத்தினால், கடல் வளம் பாதிக்கப்படும், என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சட்டவிரோதமான முறையில் சீன என்ஜின்களை விற்கும் சீனர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
source ns7tv