சினிமாவை மிஞ்சும் பாணியில் தாறுமாறாக காரை ஓட்டி பல்வேறு வாகனங்களை இடித்து தள்ளி விபத்து ஏற்படுத்தியபடியே வந்த கும்பலை கடலூரில் புதுச்சேரி போலீசார் மடக்கி பிடித்தனர்.
புதுச்சேரியில் சந்தேகத்திற்கிடமான வகையில் TN-22 என்ற எண்களை மட்டுமே கொண்ட காரை புதுச்சேரியில் இருந்து அம்மாநில போலீசார் துரத்தி வந்தனர். கடலூர் நோக்கி காரில் சென்ற அந்த மர்ம கும்பல் போலீசார் துரத்தியதை கண்டு வரும் வழியெல்லாம் தாறுமாறாக ஓட்டி பல்வேறு வாகனங்களை மோதி சேதப்படுத்தியபடி வந்தனர்.
இந்நிலையில் மர்ம கும்பல் மோதியதால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களை வாகனங்களில் துரத்தி வந்தனர். கடலூர் நகருக்குள் மட்டும் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி சுற்றி வந்த அந்த கும்பல், கடலூர் உழவர் சந்தை அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. உடனடியாக அவர்களை துரத்திய பொதுமக்கள் அந்த கும்பலை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர்.
source: ns7.tv