சனி, 4 நவம்பர், 2017

விளைநிலங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் அச்சம்! November 4, 2017

Image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதிகளில் விளைநிலங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கமுதி அருகேயுள்ள கீழத்தூவல், சவேரியார் பட்டணம், சாம்பக்குளம் போன்ற பகுதிகளில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. விளைநிலகளுக்கு நடுவே உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில்  மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் சரிசெய்யவில்லை என்று வேதனை தெரிவித்த விவசாயிகள், சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.