சனி, 4 நவம்பர், 2017

​“கமல்ஹாசன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்” - இந்து மகாசபை தலைவர் November 4, 2017

Image

கமல்ஹாசன் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என அகில பாரத இந்து மகா சபை தலைவர் பண்டிட் அஷோக் ஷர்மா கூறியுள்ளார்.

வாரப்பத்திரிகை ஒன்றில் கடந்த சில வாரங்களாக கமல்ஹாசன் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அப்பத்திரிகையின் இவ்வார இதழில் கேரள முதல்வர் பிணராயி விஜயனின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ விரும்பும் இந்துத்துவ சக்திகள் பற்றிய கேள்விக்கு, ‘எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள் என்ற சவாலை, இந்துத்துவ சக்திகளால் விட முடியாத அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது’ என பதிலளித்திருக்கிறார் கமல். 

கமலின் இப்பதிலுக்கான அகில பாரத இந்துமகாசபை தலைவரின் எதிர்வினையை ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. கமல் போன்றோர் சுடப்பட்டோ தூக்கிடப்பட்டோ கொல்லப்பட்டால்தான்  மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்றும் இந்து மதத்தையும், இந்து மதத்தை சார்ந்தவர்களையும் அவதூறாக பேசுபவர்கள் இந்த புண்ணிய பூமியில் வாழக்கூடாது என்றும் அவர்களுக்கு மரணம்தான் பதிலாக தரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.