கனமழையால் சென்னை சென்ட்ரல் பகுதியில் மெட்ரோ சுரங்கப் பணிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை குறைந்து நேற்று வெயில் நிலவிய நிலையில், நேற்றிரவும் கனமழை தொடர்ந்ததால், மெட்ரோ சுரங்க பணிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் சுரங்க பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.