திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். கல்லணை அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை திருச்சி போலீசார் விசாரித்து வந்த நிலையில், பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதன் பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் பலமுறை எச்சரித்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, வழக்கை, சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், 3 மாதத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.