பாரடைஸ் பேப்பர்ஸ் கருப்பு பண பட்டியல் விவகாரத்தில், உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தவர்கள் குறித்த பட்டியல், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது. இந்த வரிசையில் தற்போது, பாரடைஸ் பேப்பர்ஸ் எனும் பெயரில், புதிய ஆவணங்கள் கசிந்துள்ளன.
180 நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், வரி குறைவான நாடுகளில் குவித்து வைத்துள்ள கருப்பு பணம் தொடர்பான பட்டியலை பெர்முடா நாட்டை சேர்ந்த ஆப்பிள் பை என்ற சட்ட நிறுவனம் அண்மையில் தயாரித்தது. இந்த பட்டியல்தான் தற்போது, பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
இந்த பட்டியலில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பாஜக எம்பி ஆர்.கே.சின்ஹா, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நெருக்கமானவர்கள் என இந்தியாவை சேர்ந்த 714 பேர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தியாவில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் பெயர்களும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி முடிவு செய்துள்ளது.