கட்டப் பஞ்சாயத்தை தடுக்காவிட்டால் வழக்கறிஞர் தொழிலை காப்பாற்ற முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை ஒன்றிற்காக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மோகன கிருஷ்ணனிடம் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.
இதை தடுக்க முடியவில்லை என்றால் சங்கத் தேர்தலில் போட்டியிடாதீர்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
காவல்துறைக்கு எதிராக மட்டும் போராடுவதை தவிர்த்து வழக்கறிஞர் தொழிலை சரிப்படுத்தவும் நடவடிக்கை எடுங்கள் என நீதிபதி கிருபாகரன் கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர் தொழிலில் கட்டபஞ்சாயத்து அதிகமாகிவிட்டது என வேதனை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், இதனை கட்டுப்படுத்தாவிட்டால் வழக்கறிஞர் தொழிலை ஆண்டவனால் தான் காப்பாற்ற முடியும் என தெரிவித்தார்.