ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்தில் உயிர் பயத்துடன் மாணவ மாணவிகள் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாச்சியார்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 120 மாணவ மாணவிகள் படித்து வருகிண்றனர்.
இந்த பள்ளியில் உள்ள 4 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் முழுவதும் சேதமடைந்து மூடப்பட்டு விட்டது. மீதியுள்ள 3 கட்டிடங்களில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதில் கட்டிடங்களின் சுற்றுப்புறச்சுவர்கள், நுழைவுப்பகுதி, வகுப்பறை பகுதி உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கட்டிடங்களின் தூண்களும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே படித்து வருகிண்றனர்.