போக்குவரத்து நெரிசலால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னலுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சங்கராந்தி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் அமராவதி நகருக்கு புறப்பட்டார்.
அப்போது, முதல்வர் பயணத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் கடும் அவதிக்கு ஆளான ஒரு சாமானியர், காவல்துறையினரை நோக்கி கண்டனக்குரல் எழுப்பினார். அப்போது அந்த வழியாகச் சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு இது குறித்து அறிந்தார், உடனே அந்த நபரிடம் சந்திரபாபு நாயுடு மன்னிப்புக் கோரினார்.
இதனையடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு மன்னிப்புக் கேட்டார். இது, அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.