புதன், 18 டிசம்பர், 2019

சமூக வலைதளங்கள் மூலம் நூதன மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் கைது!

Image
யூடியூப் சேனலில் முதலீடு செய்து, ஸ்மார்ட்போனில் அந்த சேனலை பார்த்தாலே பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என கூறி விளம்பரம் செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர். 
சமூக வலைதளங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த வகையில் ஈரோட்டில் நூதுன மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, ஸ்மார்ட் போன்களில் சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை பார்த்தால் வருமானம் பார்க்கலாம் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் உலா வந்தன. 
இதில் பணம் கட்டி சேர்ந்தால், மாதம் ரூ.272  முதல் ரூ.8,704 வரை, 20 மாதங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,74,080  வரை சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், அந்த விளம்பரங்களை வெளியிட்ட பொறியியல் பட்டதாரிகளான பிரவீன்குமார் மற்றும் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். 
credit ns7.tv