இஸ்லாமியர்கள் செல்வதற்கு உலகில் 150 நாடுகள் இருப்பதாகவும், இந்துக்களுக்கு ஒரே நாடு தான் உள்ளது என்றும், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கருத்து தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் சபர்மதி ஆசிரமம் அருகே நடைபெற்ற, பாஜக பேரணியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், மகாத்மா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் முயற்சிகளை காங்கிரஸ் நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும், குஜராத் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
1947 பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு 22 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை, அச்சுறுத்தல், தாக்குதல், பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களால், தற்போது 3 சதவீதமாக குறைந்துவிட்டது என்றும், விஜய் ரூபானி குறிப்பிட்டார். மேலும், வங்கேதசத்தில் வெறும் 2 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், ஆப்கானிஸ்தானில் தற்போது வெறும் 500 பேர் மட்டுமே வசிக்கின்றனர், என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமியர்கள் உலகில் உள்ள 150 இஸ்லாமிய நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் இந்துக்களுக்கு ஒரே நாடாக இந்தியா மட்டுமே உள்ளது என்றும், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பேசினார்.
credit ns7.tv