புதன், 25 டிசம்பர், 2019

சென்னையில் இன்டர்நெட் சென்டர்களில் சோதனை!

Image
சிறார் ஆபாசப்படங்கள் விவகாரம் தொடர்பாக சென்னையில் 30 இன்டர்நெட் சென்டர்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்றதடுப்பு பிரிவு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து 7 5 3 0 0 0 1 1 0 0 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், dccwc.chennai@gmail.com என்ற இ-மெயில் ஐடியிலும் புகார்கள் தெரிவிக்கலாம் என குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்றதடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். 
சென்னை சூளைமேட்டில் கல்லூரி மாணவியிடம் ஆபாச வீடியோ காண்பித்த 72 வயது முதியவர் குறித்து வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் வந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டதாகவும் தெரிவித்தார். இது போல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்கள் எதுவாக இருந்தாலும், தயங்காமல் புகார் அளிக்க முன் வர வேண்டும் எனவும் ஜெயலட்சுமி கேட்டுக்கொண்டார். சென்னையில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்த 30 பேர் பட்டியல் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அதில் 12 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருப்பதாகவும் கூறினார். சிறார் ஆபாசப்படங்கள் பார்க்கப்படுவதைக் குறைக்க அனைத்து இண்டர்நெட் சென்டர்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

credit ns7.tv