திங்கள், 16 டிசம்பர், 2019

குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து வைகோ விமர்சனம்!

Image
குடியை கெடுக்கும் மசோதாவே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
மே 17 இயக்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றது உள்ளிட்ட வழக்குகளில் மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியை கெடுக்கும் மசோதா தான், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என கடுமையாக விமர்சித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பது தொடர்பாக திமுக நீதிமன்றத்தை மட்டுமே நாடியது என்றும், தேர்தல் ஆணையத்தை மிரட்டவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.

credit ns7.tv