வியாழன், 19 டிசம்பர், 2019

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது!

Image
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. 
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இத்தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17ம் தேதி நடைபெற்ற நிலையில், மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
தொடர்ந்து சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

credit ns7.tv

Related Posts: