சனி, 21 டிசம்பர், 2019

ஜார்க்கண்ட்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங். கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு!

Image
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், எந்த கூட்டணிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், சுமார் 70 சதவிகித வாக்குகள் பதிவாகின. டிசம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. 
இந்தியா டுடே- ஆக்ஸிஸ், மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 50 இடங்களைக் கைப்பற்றும் என்றும், பாஜக 22 முதல் 32 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி-வோட்டர் - ஏபிபி நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களிலும், பாஜக கூட்டணி 28 முதல் 36 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களையும், பாஜக 38 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

credit ns7.tv