வியாழன், 26 டிசம்பர், 2019

உத்தரபிரதேச போராட்டம்: பொதுசொத்துக்களை சேதப்படுத்தியதாக 130 பேருக்கு அபராதம் விதிப்பு

Image
உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 130 பேருக்கு, மொத்தம் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்துமாறு, போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் மூண்ட கலவரத்தில் 17 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தில், ராம்பூர், சம்பால் , பிஜ்நோர் , கோரக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொது சொத்துக்களை கலவரக்காரர்கள் சேதப்படுத்தியதாக போலீசார் கணக்கிட்டுள்ளனர். 
இந்நிலையில், பொது சொத்துக்களை சேதப்படுத்தியாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த 130 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள், மொத்தம் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் அடங்கிய நோட்டீஸை, காவல்துறையினர் பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். 
credit ns7.tv