சனி, 21 டிசம்பர், 2019

குடியுரிமையை நிரூபிக்குமாறு எந்த இந்தியரும் துன்புறுத்தப்படமாட்டார்கள்


Image
குடியுரிமையை நிரூபிக்குமாறு எந்த இந்தியரும் துன்புறுத்தப்படமாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பெற்றோரின் பிறப்பு சான்றிதழ், தாத்தா, பாட்டியின் சான்றிதழ்கள் கேட்கப்படும் என தகவல் பரவியது. ஆனால், இதனை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. 
அதில் கல்வியறிவு இல்லாத குடிமக்களிடம் ஆவணங்கள் இல்லை என்றாலும், அவர்கள் சாட்சியங்களையும், உள்ளூர் கிராம அதிகாரிகளின் ஆவணங்களையும் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி அல்லது பிறந்த இடம் குறித்த சான்றிதழ்களை அளித்து குடியுரிமையை நிரூபிக்கலாம் என்றும், ஏராளமான ஆவணங்கள் பட்டியலில் இருப்பதால், எந்த இந்தியக் குடிமகனும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான வரையறைகளை உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றும் இந்தியக் குடிமக்களாக இருப்போர் குடியுரிமையை நிரூபிக்க 1971-ம் ஆண்டுக்கு முந்தைய தாய், தந்தை அல்லது, தாத்தா, பாட்டி பிறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

credit ns7.tv