ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு சிறப்புத் தொகுப்பு, வரும் 9-ஆம் தேதி முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாயுடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார்.
இத்திட்டத்தின் கீழ், 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக 2,363 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதியன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். உள்ளாட்சித் தேர்தல் காரணமாக பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்ததால், பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv