ஞாயிறு, 29 டிசம்பர், 2019

காவல் அதிகாரி குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்!

Image
உத்தரப்பிரதேசத்தில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைதான காவல் அதிகாரி குடும்பத்தினரை சந்திக்க, போலீசாரின் தடையை மீறி சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம், நாடு முழுவதும் நீடித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரி தராபுரி, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரது குடும்பத்தினரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த போலீசார், அவரை பாதியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி நடைப்பயணமாக, ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டை நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, பெண் போலீசார் தமது கழுத்தை பிடித்து தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் தம்மிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், தாம் கீழே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv