வெள்ளி, 27 டிசம்பர், 2019

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது...!

Image
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்கு தலைவர், உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சில தினங்களாக உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்த நிலையில், வீடு, வீடாக சென்று வேட்பாளர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
பொதுமக்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர், காலை 7 மணி முதலே ஆர்வத்துடன் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். குள்ளம்பாளையத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் அமைச்சர் செங்கோட்டையன். சிவகங்கை மாவட்டம் தமறாக்கி கிராமத்தில் அமைச்சர் பாஸ்கரன் வாக்களித்தார். கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வாக்களித்தார்.
இந்நிலையில், 27 மாவட்டங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை இணையதள கேமராக்கள் மூலம் மாநில தேர்தல் அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர். 

credit ns7.tv