வெள்ளி, 20 டிசம்பர், 2019

27 மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு இப்போது இல்லை!

Image
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திண்டுக்கலைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நீதிபதிகள்,  துரைசுவாமி, ரவீந்திரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், பொங்கல் பரிசு திட்டத்தால், ஜனநாயக முறைப்படி தேர்தலில் வாக்களிக்க முடியாமல் பணத்திற்கும், இலவச பொருட்களுக்கும் வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். 
எனவே, தமிழக அரசு வழங்கவுள்ள ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை மறுத்த அரசு தரப்பு வழக்கறிஞர், தேர்தல் நடக்க கூடிய 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என கூறினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. 
credit ns7.tv