வியாழன், 26 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்த சட்ட ஆவண நகலை கிழித்தெறிந்த மாணவி!

Image
கொல்கத்தாவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் குடியுரிமை திருத்த சட்ட ஆவண நகலை  கிழித்தெறியும் மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது விழா மேடை ஏறிய மாணவி தேபஸ்மிதா சவுத்ரி என்பவர் தனக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பல்கலைக் கழக துணைவேந்தரிடம் புன்னகையுடன் பெற்றுக்கொண்டார். பின்னர், அவற்றை மேடையிலேயே  வைத்த மாணவி யாரும் எதிர்பார்க்காத வகையில், தன் கையில் கொண்டு வந்திருந்த குடியுரிமை திருத்த சட்ட ஆவண நகலை  கிழித்தெறிந்தார்.
பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பினார். அதைத்தொடர்ந்து துணைவேந்த எடுத்துக் கொடுத்த சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு இருக்கைக்கு திரும்பினார்.  பட்டமளிப்பு விழாவில்,  குடியுரிமை திருத்தச் சட்ட நகல் மாணவி  கிழித்தெறியப்பட்டது அங்கிருந்த  அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

credit ns7.tv