குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கேரள மாநிலம் திரிச்சூரில் இடதுசாரி மற்றும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்க எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், பாஜகவின் மாணவரணியை சேர்ந்தவர்களை சராமரியாக அடித்து உதைத்தனர். கல்லூரி வாளகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அண்மையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv