டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசினால் கடந்த காலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிகுள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அவ்வப்போது பெய்த மழையால் காற்று மாசு குறைந்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் சந்தினி சவுக் பகுதியில் காற்றின் தரம் 466 புள்ளிகளை எட்டி மாசு மிகவும் தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மதுரா மற்றும் லோதி சாலையில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
நொய்டா மற்றும் குருகிராம்மிலும் காற்று மாசு மோசமடைந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்னை உள்ளவர்கள் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்றும், வெளியே செல்லும் போது தங்களது மருந்துகளை உடன் எடுத்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
credit ns7.tv