வெள்ளி, 20 டிசம்பர், 2019

மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் : கே. பாலகிருஷ்ணன்

Image
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் களை கட்டத் தொடங்கியுள்ள நிலையில், சிபிஎம் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், திருவாரூர் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளரையும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து பால கிருஷ்ணன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

credit ns7.tv

Related Posts: