திருவாரூரில் உள்ளாட்சித்தேர்தலுக்கு பின்னர் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் எடுத்துச்சென்ற வாகனத்தில், மூன்று மர்மநபர்கள் பயணம் செய்வதை அறிந்த பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் போலீஸார் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன. நீலக்குடி கிராமத்தைக் கடந்தபோது, வாக்குப்பெட்டிகள் ஏற்றப்பட்ட வாகனத்தில் இருந்து மூன்று மர்மநபர்கள் எகிறி குதித்து ஓடியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பொதுமக்கள் வாக்குப்பெட்டி ஏற்றிச் சென்ற வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புடன் கொண்டு செல்லவேண்டிய வாகனத்தில் சம்பந்தமில்லாத நபர்களை ஏற்றியது எதற்காக என்று கூறி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். தகவலறிந்த நன்னிலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
credit ns7.tv