இருப்பிடத்தை அறிந்து கொள்ள விரும்பாத பயனர்களின் இருப்பிடத்தையும் கூட தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது சமூக வலைத்தளவாசிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய இருப்பிடத்தை ஃபேஸ்புக்கிடம் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்ற தேர்வினை ஒரு பயனர் தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட அவரின் இருப்பிடத்தை தங்களால் தெரிந்து கொள்ள இயலும் என்று அமெரிக்க செனட்டர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளது. இரண்டு செனட்டர்களால் தகவல் கோரப்பட்ட நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் அக்கடிதத்தை எழுதியதாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் செனட்டர்களுக்கு எழுதிய கடிதமும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் பயனர்களின் இருப்பிடம் குறித்த விவரம் தெரிவதால் அருகாமையில் இருக்கும் வணிக நிறுவனங்கள் குறித்த தகவல்களை பயனர்களுடன் பகிர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர் ஒருவர் தனது இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றாலும் கூட கடைகள் அல்லது ஒரு இடத்தில் இருப்பதாக நண்பர்களால் டேக் செய்வதன் மூலமோ அல்லது ஃபேஸ்புக்கின் ஷாப்பிங் பிரிவு மூலம் ஷாப்பிங் செய்யும் போது ஒரு முகவரியை கொடுத்தால் அதன் மூலமும் பயனர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும் என்று ஃபேஸ்புக் விளக்கமளித்துள்ளது. இதுமட்டுமல்லாது ஐபி முகவரி வாயிலாகவும் இருப்பிடத்தை அறிய முடியும் என்று கூறியுள்ளது.
credit ns7.tv