ஒடிசா மாநிலத்தின் நபரங்பூர் மாவட்டத்தில் கொசகமுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட குமந்தலி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 13ம் தேதி இரவு அவரது வீட்டிலிருந்து மாயமானார். அடுத்த நாள் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் அச்சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் கொலை சம்பவத்தில் காவல்துறை மெத்தனமான செயல்படுவதாக கூறி டிசம்பர் 26ம் தேதியன்று நபரங்பூர் மாவட்டத்தில் 12 மணி நேர கடையடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்த போராட்டம் நேற்று நடைபெற்ற போது ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் எம்.பியுமான பிரதிப் மஜ்ஹி நபரங்பூர் பகுதியில் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். அப்போது காவல்துறையினருக்கு அவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தனது ஆதரவாளர் ஒருவரிடம் செல்போனில் பேசிய பிரதிப் மஜ்ஹி பெட்ரோலை தயாராக வைத்திருங்கள், நான் கட்டளையிடும்போது அனைத்தையும் தீயிட்டு கொளுத்திவிடுங்கள். அடுத்த என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துவிடலாம் என்று கூறுகிறார்.
போராட்டத்தின் போது பெட்ரோலை தயாராக வைத்திருங்கள், கட்டளையிட்டவுடன் அனைத்தையும் தீயிட்டு கொளுத்திவிடுங்கள் என்று முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஒருவர் கட்சித் தொடண்டர்களிடம் தொலைப்பேசியில் பேசும் பரபரப்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
credit ns7.tv