credit ns7.tv
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளும், மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் 400 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வருவதாகவும், வன்முறையில் ஈடுபட்டதால் தான் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
எவ்வளவு விலை கொடுத்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வன்முறையை நியாயப்படுத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ள அமித்ஷா, பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.