செவ்வாய், 17 டிசம்பர், 2019

மாநில தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

Image
உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை புறந்தள்ளிவிட்டு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக, திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று, திமுக தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்துவது தொடர்பாக, கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் உச்சநீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை மற்றும் தொகுதி சுழற்சி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், ஆனால் அவற்றையெல்லாம் மாநில தேர்தலை ஆணையர் பழனிசாமி பின்பற்றவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மனுவில் திமுக கோரியுள்ளது.

credit ns7.tv