ஜல்லிக்கட்டு காளைகளை கணக்கெடுக்கும் பணி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முறைப்படுத்தவும், காளைகளின் இனங்களை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கு வரும் நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கும், மாநிலம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.
இதில், காளை உரிமையாளரின் ஆதார் எண், காளையின் இனம், வயது, உயரம், இரண்டு கொம்புகளுக்கிடையே உள்ள அளவு, காளையின் புகைப்படம் மற்றும் இடது கண்ணின் புகைப்படம் போன்ற தகவல்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் அவனியபுரம் பகுதியில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்ட 40 மாடுகளில், 35 மாடுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கலப்பினம் என்பதால் 5 மாடுகள் பதிவு செய்யப்படவில்லை.
credit ns7.tv