ஞாயிறு, 15 டிசம்பர், 2019

ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

Image
சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவின் பேரில், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
மேலும், கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனாலும், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என மாணவியின் தந்தை, தமிழக முதல்வரிம் மனு அளித்தார்.
ஃபாத்திமா தற்கொலை வழக்கில் முன்னேற்றம் ஏதுமில்லை என்பதால், வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றக்கோரி மாணவர் அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கை, மத்திய குற்றப்பிரிவில் இருந்து சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

credit ns7.tv