கடும் குளிர் காரணமாக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான தால் ஏரி உறைந்தது.
வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஸ்ரீநகரில் நேற்று 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான தால் ஏரி உறைய தொடங்கியுள்ளது. இதில் சில படகுகள் பாதியளவு பனிக்கட்டியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள படகோட்டிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
கடுங்குளிர் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-பாரமுல்லா செல்லக்கூடிய ரயில்வே தண்டவாளங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கிறது. அதை ரயில் மூலம் தற்காலிகமாக அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
credit ns7,tv