புதன், 18 டிசம்பர், 2019

அதிமுக எம்.பி அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்!

Image
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த சூழலில், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக மாநிலங்களவையில் முகமது ஜான் வாக்களித்ததை கண்டித்து, அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். 
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அனைத்து கட்சியினர் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் முகமதுஜான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

credit ns7.tv

Related Posts: