வெள்ளி, 27 டிசம்பர், 2019

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புத் திட்டம் உள்நோக்கம் கொண்டது - ப.சிதம்பரம்

credit ns7.tv
Image
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புத் திட்டம் உள்நோக்கம் கொண்டது, என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் மட்டுமே செயல்படுத்தப்பட்டது, என விளக்கமளித்துள்ளார். அப்போது சோனியா காந்தி பேசிய வீடியோவை, பாஜக வெளியிட்டதற்கு நன்றி, என தெரிவித்துள்ள ப. சிதம்பரம், அதை தெளிவாக கேட்டால் குடியிருப்பவர்கள் பற்றிய கணக்கெடுப்பு தான், NPR என்பது புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு அறிவித்துள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டம், உள்நோக்கம் கொண்டது என்றும், ஆபத்தானது என்றும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 2010ல் செயல்படுத்தப்பட்ட மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து இது மாறுபட்டது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக நேர்மையாக இருந்தால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 2010ம் ஆண்டை போலவே செயல்படுத்துவோம், என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், என்றும் ப. சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.