வியாழன், 19 டிசம்பர், 2019

குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி குறித்து நிர்பயாவின் தாயார் மகிழ்ச்சி!

Image
குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். 
கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை பலனின்றி நிர்பயா உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ், பவன்குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் ஆகியோருக்கு கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டைனை வழங்கியது.
இந்நிலையில், அக்சய் குமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை வேறு அமர்வு விசாரிக்கும் என்று, தலைமை நீதிபதி பாப்டே  அமர்வில் இருந்து செவ்வாய் கிழமையன்று விலகினார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போபண்ணா அடங்கிய அமர்வு விசாரித்தது. மறு சீராய்வு செய்ய தகுதியில்லை என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை உறுதியாகியுள்ளது.

credit ns7.tv