புதன், 18 டிசம்பர், 2019

நிர்பயா வழக்கு: மறுசீராய்வு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை...!

Image
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து முகேஷ், பவன் குப்தா, வினய் ஆகியோர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
இந்நிலையில் அக்சய் குமார் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலகுவதாக தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் பானுமதி, அசோக்பூஷண், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சீராய்வு மனு விசாரணைக்கு வருகிறது. 
credit ns7.tv