புதன், 18 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் ஆபத்தானது

.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் ஆலோசித்ததாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் ஆபத்தானது என்றும், நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்க கூடியது எனவும் அவர் கூறினார். 
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் புதிய அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், திருத்த சட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்வது நாட்டுக்கு நல்லது எனவும் திருமாவளவன் தெரிவித்தார். 
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. 

Credit ns7.tv

Related Posts: