திங்கள், 16 டிசம்பர், 2019

பிஎம்சி வங்கி முடக்கம் - உத்தவ் தாக்கரே வீட்டை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

Image
மும்பையிலுள்ள பிஎம்சி வங்கி முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், டெபாசிட் தொகையை திரும்பப் பெற்றுத்தரக் கோரி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை வீட்டை முற்றுகையிட்டனர். 
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பஞ்சாப், மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நான்காயிரத்து 355 கோடி நிதி முறைகேடு நடந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோசடியில் ஈடுபட்டதாக வங்கி இயக்குநர்கள் ஜகதீஷ் மூக்கே, முகி பவிசி, திருப்தி பனே ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிஎம்சி வங்கியில் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிருப்தியும், வேதனையும் அடைந்த வாடிக்கையாளர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டை முற்றுகையிட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தையை நம்பியே வங்கிகளில் டெபாசிட் செய்ததாகவும், ஆனால் அதைப்பற்றி பிரதமர் மோடி கவலைப்படைவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை அழைத்துப் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

credit ns7.tv